நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் வசிப்பவர் இளங்கோ 59, வனிதா 56, தம்பதியினர். இவர்களின் மகன் அருண்குமார் 35, இவருக்கு ஷர்மிலி என்ற மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தென்னை மரம் ஏறும் தொழிலாளியான அருண்குமார் உடல்நலம் சரியில்லாததால் கடந்த ஓராண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வீட்டில் பொருளாதார சிக்கல் இருந்தது.
பெற்றோர் வேலைக்கு செல்ல கூறினர். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண்குமார் நேற்று முன்தினம் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

