/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை
/
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை
ADDED : டிச 19, 2025 05:42 AM

தேனி: வருஷநாடு பகுதி அரசு பள்ளியில் படித்த 9ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கி பின், வேறு பெண்ணை திருமணம் முடித்த வெயில்முத்துவிற்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வருஷநாடு பகுதி சூரன் மகன் வெயில்முத்து. இவர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் 2020 முதல் 2022 வரை பழகினார்.
2022ல் வெயில்முத்துவிற்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் 2022 அக்.1ல் சிறுமியின் வீட்டிற்கு சென்றவர், தனியாக பேச அழைத்தார். சிறுமி வரமாட்டேன் என மறுப்பு தெரிவித்தார்.
நீ வரவில்லை எனில் உன் பெற்றோரை வெட்டி கொலை செய்வேன் என மிரட்டி சிறுமியை தோட்டத்திற்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின் 2023 மார்ச் 4ல் தனது மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்ற நிலையில், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதை தெரிந்தும், பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ வழக்கில் வெயில்முத்துவை 2023 மார்ச்சில் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து வெயில்முத்துவிற்கு 40 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

