UPDATED : அக் 15, 2026 07:03 PM
ADDED : அக் 15, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலை நுழைவு கேட் முன்பு தொழிலாளர்கள் போராட்ட விளக்கக் கூட்டம் நடந்தது.
பணி நிரந்தரம், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், நூற்பாலையை லாபகரமாக இயக்குதல், தொழிலாளர்களுக்கான உரிமைகளை வழங்க கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த விளக்க கூட்டத்தில் பஞ்சாலை சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் ஜெயபாண்டி, இந்திய தொழிற்சங்க மைய துணை தலைவர் வெங்கடேசன், பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமணதாஸ் உட்பட 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
