ADDED : மார் 17, 2024 06:29 AM

உத்தமபாளையம்: உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் பெரிய கருப்பையா மகன் கணேசன் 46, இவருக்கு தீபா என்ற மனைவி, இரு குழந்தைகளும் உள்ளனர். 6மாதங்களுக்கு முன்பு மனைவி குழந்தைகளுடன் சென்னைக்கு சென்றார். இவர் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில் செய்தார். புதுச்சேரியில் அங்குள்ள நர்சரியில் பணியாற்றினார்.
மூன்று நாட்களுக்கு முன்பு உத்தமபாளையம் வந்து தந்தை வீட்டில் தங்கினார்.
நேற்று காலை உத்தமபாளையத்திலிருந்து உ. அம்மாபட்டி செல்லும் ரோட்டில் இறந்து கிடந்துள்ளார்.
கழுத்தில் கயிற்றால் இறுக்கிய அடையாளம்,உடலில் சிராய்ப்பு காயங்கள் உள்ளது. உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் கவிதா உடலை கைப்பற்றி தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிப்பட்டது.
கிராமச் சாவடியிலிருந்து சம்பவ இடம் வரை சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் கொலை வழக்காக மாற்ற முடிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

