/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறும் தொழிலாளர்கள்
/
தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறும் தொழிலாளர்கள்
தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறும் தொழிலாளர்கள்
தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறும் தொழிலாளர்கள்
ADDED : அக் 02, 2025 03:24 AM
மூணாறு : மூணாறில் போதிய விழிப்புணர்வு இன்றி தொழிலாளர்கள் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்து வருகின்றனர்.
மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பல தலைமுறைகள் தொழிலாளர்களாக தமிழர்கள் வேலை செய்கின்றனர்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.480 வரை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதால் அதீத சிரமங்களுடன் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
அதனால் பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்பட இதர செலவுகளை சமாளிக்க உப வருமானத்திற்காக பசு வளர்த்தல், காய்கறி சாகுபடி, ஆட்டோ, ஜீப் ஓட்டுதல் என பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
சிலர் 'மைக்ரோ' நிதி நிறுவனங்களில் கடன் பெற்று செலவுகளை சமாளிக்கின்றனர்.
இந்நிலையில் எதிர் காலத்திற்காக சேமித்த பணத்தை சில தொழிலாளர்கள் தேசிய வங்கிகளில் 'டெபாசிட்' செய்வதை தவிர்த்து போதிய விழிப்புணர்வு இன்றி தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
அதற்கு நிதி நிறுவனங்கள் நுாதன முறையை கையாளுகின்றன. அதன்படி உள்ளூர்வாசிகளை பணி அமர்த்தும் நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகக் கூறி பெரும் தொகையை முதலீடு செய்ய பயனாளிகளை வளைக்க அறிவுறுத்துகின்றனர்.
அதன்படி ஊழியர்கள் ஏஜன்ட் போன்று செயல்பட்டு அதிக வட்டி தருவதாக கூறி உறவினர்கள் உட்பட தொழிலாளர்களை வளைத்து விடுகின்றனர். அது போன்று தொழிலாளர்களை வளைத்து முதலீடு செய்யப்பட்ட நகரில் தபால் அலுவலகம் பகுதியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனம் கடந்த ஏப்ரலில் மூடப்பட்டது.
எர்ணாகுளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட அந்நிறுவனம் மூணாறு பகுதியில் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோரின் முதலீட்டு தொகையான ரூ.50 லட்சத்துடன் மாயமாகினர்.
அதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை நாடி வருகின்றனர். ஏஜன்ட் போன்று செயல்பட்ட ஊழியர்களும் கைவிரித்து விட்டதால், தொழிலாளர்கள் பணத்தை இழந்த வேதனையில் தவித்து வருகின்றனர்.