ADDED : ஜன 08, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் வேதியியல் துறை பயிலரங்கம் நடைபெற்றது. முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் அப்துல்காதர் ஜெய்லானி முன்னிலை வகித்தார்.
உதவி பேராசிரியர் சிவக்குமார் வரவேற்றார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் சையது அப்தாகிர்,' கார்பன் எஃகின் துருப்பிடித்தல் தடுப்பான்களாக காலாவதியான மருந்துகளை பயன்படுத்துவது,' குறித்து விளக்கினார். உதவி பேராசிரியர் ஷாகுல் நன்றி கூறினார். இப்பயிலரங்கத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
