/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 15, 2025 05:21 AM

தேனி: தேனி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தை ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை டாக்டர் தீபன்கர்தத்தா, டாக்டர் ஹேமா, மேலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை கண் டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் கிருஷ்ணம்மாள் நினைவு செவிலியர் கல்லுாரி, அன்னை டோரா கல்லுாரி, என்.ஆர்.டி., பாராமெடிக்கல் கல்லுாரி, திரவியம் நர்சிங் கல்லுாரி மாணவிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர்வலம் பெரியகுளம் ரோடு, ரயில்வே கேட் வழியாக மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.

