UPDATED : அக் 02, 2026 01:10 AM
ADDED : அக் 02, 2026 01:08 AM

அ நிறம் | அளவு
தேனி: உலக இதய தினத்தை முன்னிட்டு தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ‘துடிப்பை தவறவிடாதீர்கள்’ என்ற தலைப்பில் ஊர்வலம் நடந்தது.
தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கல்லுாரி முதல்வர் ரோகினி தேவி தலைமையில் உலக இதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
துணை முதல்வர் கவிதா முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் வெளிநோயாளிகளிடம் இதய நோய் பாதிப்புகள், மாரடைப்பு அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆர்.எம்.ஓ., சிவக்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., ஈஸ்வரன், அவசர சிகிச்சை பிரிவு, இதய நோய்கள் பிரிவு டாக்டர்கள் பால சுப்ரமணி, அறவாளி, திருவேங்கடம் ஒருங்கிணைத்தனர். இதில் மருத்துவ மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
