தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/உலக அறிவியல் தின போட்டி

உலக அறிவியல் தின போட்டி

உலக அறிவியல் தின போட்டி


ADDED : மார் 02, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை,அறிவியல் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் உலக அறிவியல் தின போட்டிகள் துறை மாணவிகளுக்கு இடையே நடந்தது.

உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், முதல்வர் சித்ரா, கல்லுாரியின் துணை முதல்வர்கள் கோமதி, சுசிலா, சரண்யா, உமாகாந்தி, கிருஷ்ணவேனி, இயற்பியல் துறை தலைவர் மீனாம்பிகை ஆகியோர் பேசினர்.

வினாடி வினா, வரைபடம் வரைதல், கட்டுரை எழுதுதல், மாற்றி பேசுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 90 மாணவிகள் பங்கேற்றனர். 12 மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு இயற்பியல் துறை தலைவர் கேடயங்கள், சான்றிதழ்களை வழங்கினார். துறை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us