ADDED : பிப் 08, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் கிளை நூலகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வாசிப்பரங்க நிகழ்வு நடந்தது. எழுத்தாளர் முத்துக்கண்ணன் தலைமையில், கிளைச் செயலாளர் கவுதம் வரவேற்றார். கிளை நூலகர் வீருமாரம்மாள் முன்னிலை வகித்தார்.
யானை குறித்து தமிழில் வெளியான சிறுகதைகள் வாசித்து கலந்துரையாடப்பட்டன. சிறார் இலக்கியத்தில் யானை கதைகள் பற்றி மாணவர்கள் பேசினர்.
மாநில எழுத் தறிவு கொண்டாட்ட நிகழ்வில் சிறந்த செயல்பாட்டாளருக்கான விருதை பெற்ற துணைச் செயலாளர் கவிதாவை பாராட்டி னர்.
வாசிப்ரங்க ஒருங்கிணைப்பாளர் லட்சுமண குமார், பேச்சாளர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
