/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரமற்ற விதை, படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் ... மகசூல் பாதிப்பு: குவிண்டாலுக்கு ரூ.700 குறைவால் விவசாயிகள் கவலை

UPDATED : ஜன 04, 2026 06:23 AM
ADDED : ஜன 04, 2026 06:21 AM

போடி,:தேனி மாவட்டத்தில் தரமற்ற மக்காசோள
விதைகளால் படைப்புழு பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறைந்துள்ளது. ஆறு
மாதத்திற்கு முன் குவிண்டால் ரூ.2500 விற்ற நிலையில் தற்போது ரூ.700
குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி மீனாட்சிபுரம், விசுவாசபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, ராசிங்காபுரம், ஆண்டிபட்டி, பெரியகுளம் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். மக்காச் சோள சாகுபடியில் குறைந்த நோய் தாக்குதல், குறைந்த பராமரிப்பு உள்ளிட்டவற்றால் இதனை சாகுபடி செய்ய விவசாயிகள்அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மக்காச்சோளத்தை பல்வேறு வகையில் பாப்கார்ன், ஸ்வீட் கார்ன் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலும் பதப்படுத்தி வேகவைத்து சாப்பிடவும், சத்து மாவு தயாரிக்கவும், கோழி தீவனங்களுக்காகவும் பல்வேறு நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றன. நல்ல விலை கிடைத்ததால் மக்காச்சோளம் சாகுபடியில் தீவிரம் காட்டி வந்தனர்.
கடந்த ஆண்டு கூடுதல் மழை பொழிவால் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்தது.
விலையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் விளைச்சலும் பாதித்துள்ளது. விளைச்சல் குறைந்த நிலையில் உரிய விலையும் கிடைக்கவில்லை. இதனால் மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.