ADDED : ஆக 06, 2025 08:07 AM
அ நிறம் | அளவு
தேனி : கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் தேனி உழவர் பயிற்சி மையத்தில் நாளை(ஆக.,7) கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தபயிற்சியில் விவசாயிகள், கறவைமாடு வளர்ப்போர் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் தேனி மதுரை ரோட்டில் சார்நிலை கருவூலம் எதிரே உள்ள உழவர் பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98650 16174 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
