தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சோலார் பேனல் பொருத்துதல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சோலார் பேனல் பொருத்துதல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சோலார் பேனல் பொருத்துதல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஏப் 08, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏப்.,21 முதல் 6 நாட்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல், பழுதுநீக்குதல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பயிற்சின் போது காலை, மதிய உணவு, இருவேளை டீ வழங்கப்படும். தங்குமிடம் இலவசம். தங்கி பயிற்சி பெறுபவர்களுக்கு மூன்றுவேளை உணவு வழங்கப்படும். வேலை இல்லாத கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் குடும்பத்தில் இருந்து பயிற்சி பெற வருபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகலுடன் ஏப்.,21க்குள் பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே உள்ள கனராவங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம்.

அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us