UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 05:45 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு வழங்கும் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் நேரில் பெறலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் முதல்தளம், சேப்பாக்கம், சென்னை 600 005' என்ற முகவரிக்கு அக்.,31 க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
