UPDATED : நவ 24, 2026 07:38 PM
ADDED : நவ 24, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
தேனி: தமிழக அரசால் வீர தீர செயல்கள் புரிந்து உயிர், உடமைகளை காப்பற்றியவர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்த பதக்கம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 2027 ம் ஆண்டிற்கான விருது பெற குறிப்பிட்ட தக்க வீர தீர செயல் புரிந்த தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் டிச., 8 க்குள் http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வீர தீர செயல் பற்றிய விரிவான அறிக்கையை தமிழ், ஆங்கிலத்தில் தயார் செய்து கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் டிச.,கோ்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
