/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லாட்ஜில் பெண்ணுக்கு தொந்தரவு: வாலிபர் கைது
/
லாட்ஜில் பெண்ணுக்கு தொந்தரவு: வாலிபர் கைது
ADDED : செப் 17, 2025 03:08 AM
தேனி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமணம் முடித்த 27 வயது பெண்ணை ஏமாற்றி லாட்ஜில் அடைத்து மானபங்கம் செய்ய முயன்ற கன்னியமங்கலத்தைச் சேர்ந்த அஜித்குமாரை 30, போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்த 27 வயது பெண் செங்கல் காளவாசலில் வேலை செய்தார். அப்போது 30 வயது நபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இரு மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் ஆண்டிபட்டி அருகே வசித்தனர்.
இத்தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில் கணவரின் அலைபேசி உடைந்து விட்டது. கொடுவிலார்பட்டியில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்ற பெண் அலைபேசியை பழுது நீக்கம் செய்துள்ளார். ஆக., 19ல் கணவரின் அலைபேசியில் இருந்து அவரது நண்பர் அஜித்குமாரை அழைத்து கணவர் பற்றி விசாரித்தார்.
அப்போது அஜித்குமார் 30, ஆண்டிபட்டி அருகே உள்ள டி.புதுாருக்கு வருமாறு அந்த பெண்ணை அழைத்தார். அங்கு சென்ற பெண்ணை ஆசாரிபட்டி ரோட்டில் உள்ள லாட்ஜில் கணவர் தங்கி இருப்பதாக கூறி அழைத்து சென்றார். அங்கு அறையில் தன் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்று மிரட்டி பெண்ணின் ஆடையை கிழித்து மானபங்கம் செய்ய முயன்றார்.
அங்கிருந்து தப்பிய பெண் கணவரிடம் சென்று நடந்ததை கூறினார். பெண் அளித்த புகாரின்படி அஜித்குமாரை ராஜதானி போலீசார் கைது செய்தனர்.