ADDED : மார் 02, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
தேனி: ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம்(தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை, கேபின் குழு பணியாளருக்கான இலவச பயிற்சி திருப்பூரில் வழங்கப்பட உள்ளது.
இதில் விமான டிக்கெட் முன்பதிவு, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பயிற்சி வழங்கப்படும். விடுதி, உணவு, பயிற்சி செலவுகளை தாட்கோ மூலம் செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ பிரிவு அலுவலகத்தை நேரில் அல்லது 04546 - 260 995 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
