ADDED : அக் 27, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி போடி ரோட்டில் கோடாங்கிபட்டி தென்றல்நகர் வினோத்குமார் 31, டூவீலரில் சென்றார்.
அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், வாகன டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி பேச்சு வார்த்தைக்கு பின், கலைந்து சென்றனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

