/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விளை நிலங்கள்வீட்டு மனைகளாக மாறுவதால் விவசாயம் பாதிப்பு
/
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விளை நிலங்கள்வீட்டு மனைகளாக மாறுவதால் விவசாயம் பாதிப்பு
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விளை நிலங்கள்வீட்டு மனைகளாக மாறுவதால் விவசாயம் பாதிப்பு
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விளை நிலங்கள்வீட்டு மனைகளாக மாறுவதால் விவசாயம் பாதிப்பு
ADDED : ஜூலை 15, 2011 02:06 AM
குற்றாலம்:தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுவருகிறது.
கட்டம் கட்ட தடை விதிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேளாண்மைத்துறையில் வேளாண்மை உணவு பொருட்கள் உற்பத்திதிறன் அதிகரிக்கவும் விவசாயிகளின் விவசாய வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளிடம் உள்ள தரிசு நிலங்களை மாற்றவும் நீடித்த, நிலையான வேளாண்மை உற்பத்தியை அடையவும் வேண்டி விவசாயிகள் வாரியாக திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் வட்டாரம் மாவட்ட அளவிலான செயல்திட்டம் தயாரித்து அனுப்பதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அரசின் உத்தரவையும் மீறி ஆறு, குளம் போன்ற நீர் நிலைப்பகுதிகளை ஆக்ரமிப்பு செய்தும், விளை நிலங்களை பயிரிடாமல் வருடக்கணக்கில் தரிசு நிலங்களாகவே போட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிளாட் போட்டு வீட்டு மனைகளுக்கும், தொழிற்சாலை நிறுவனங்களுக்கும் அதிக தொகைக்கு விற்பனை செய்துவிடுகின்றனர்.விளை நிலத்தை விலைக்கு வாங்கிய நபர்கள் மேற்கொண்டு அதிக தொøக்கோ, அல்லது கட்டடம் கட்டி விடுவதால் மற்ற விளைநிலத்திற்கு இவ்விழயாக தணணீர் கொண்டுசெல்வது பாதிக்கப்படும் சுற்றுப்புறங்களில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும். வரும் காலங்களில் விளைநிலங்கள் அனைத்தும் வீடு மனைகளாக மாறிவரும்போது அத்யாவசிய உணவு பொருட்கள் கிடைக்காமல் பசி பட்டினி பஞ்சம் ஏற்படம் அவலநிலை ஏற்படம்முன் வரும்முன் காப்போம் என்பதை உணர்ந்து விளை நிலங்களிலும், நீர் நிலை பகுதிகளிலும் கட்டடம் கட்ட தடை செய்தால் மட்டுமே மீண்டும் விவசாயம் செழிப்படையும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.