/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்மதிமுக சார்பில் வரும் 15ம் தேதி நடக்கிறது வைகோ பங்கேற்பு

ADDED : ஜூலை 13, 2011 01:35 AM
திருநெல்வேலி:திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழியில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது.
நான்குநேரி கிழக்கு ஒன்றியம் மதிமுக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
பொதுக்கூட்டம் வரும் 15ம் தேதி இட்டமொழி சரோஜினி திடலில் மாலை 6 மணிக்கு
நடக்கிறது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சஞ்சீவ் குமார் தலைமை வகிக்கிறார்.
நிர்வாகிகள் துரைச்சாமி, சந்திரசேகரன், கோயில்ராஜ், ஜெயச்சந்திரன்,
தங்கராஜ் முன்னிலை வகிக்கிறார். மாநில தொண்டர்படை துணை அமைப்பாளர் முத்தையா
வரவேற்கிறார். மாநில இலக்கிய அணி தலைவர் மதுரா தொகுத்து வழங்குகிறார்.
மதிமுக பொதுசெயலாளர் வைகோ, துணை பொதுசெயலாளர் நாசரேத் துரை, புறநகர் மாவட்ட
செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், தூத்துக்குடி மாவட்ட
செயலாளர் ஜோயல், குமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், ஆட்சிமன்ற குழு
உறுப்பினர்கள் ஜெயராஜ், சதன் திருமலைக்குமார், மின்னல் முகமது அலி, மாநில
மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம்,
மாநில மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன், அரசியல் மைய உறுப்பினர்கள்
திவான், தமிழ்வென்றி, அசன் இப்ராகிம், மாநில தேர்தல் பணிசெயலாளர் குட்டி
சண்முக சிதம்பரம் பேசுகின்றனர்.
விஜய அச்சம்படு கிளை செயலாளர் வெள்ளையா நன்றி கூறுகிறார்.