/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழைஅணைகளில் நீர்மட்டம் உயர்வு
/
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழைஅணைகளில் நீர்மட்டம் உயர்வு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழைஅணைகளில் நீர்மட்டம் உயர்வு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழைஅணைகளில் நீர்மட்டம் உயர்வு
ADDED : ஜூலை 15, 2011 02:27 AM
திருநெல்வேலி:நெல்லை மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயருகிறது.நெல்லை மாவட்டப் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பால் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையினால் குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 42.35 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 951.11 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதில் 707.25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சேர்வலாறு அணையில் 60.73 அடி நீர்மட்டம் உள்ளது. மணிமுத்தாறு அணையில் 54.05 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4.25 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடனா அணையில் 47.10 அடி நீர்மட்டத்தில் வினாடிக்கு வரும் 57.96 கன அடி தண்ணீரில் 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.ராமநதியில் 40.25 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 32.36 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதில் 40 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கருப்பாநதியில் 47.61 அடி தண்ணீர் உள்ளது. குண்டாறில் 36.10 அடி நீர்மட்டத்தில் அணைக்கு வரும் 43 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறில் 2, நம்பியாற்றில் 10.47, கொடுமுடியாற்றில் 12.75, அடவிநயினாரில் 63.50 அடி நீர்மட்டம் உள்ளது.மழையை பொறுத்தவரை பாபநாசம் அணையில் 5 மி.மீ, ராமநதியில் 5, குண்டாறில் 24, செங்கோட்டையில் 7.4, ஆலங்குளத்தில் 2.4 மி.மீ அளவுகளில் மழை பெய்துள்ளது.தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டு இதமான சீசன் நிலவுவதால் ஓரிரு நாட்கள் மழை நீடிக்க அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.