sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கூவமாக மாறும் குண்டாறு பராமரிக்க வலியுறுத்தல்

/

கூவமாக மாறும் குண்டாறு பராமரிக்க வலியுறுத்தல்

கூவமாக மாறும் குண்டாறு பராமரிக்க வலியுறுத்தல்

கூவமாக மாறும் குண்டாறு பராமரிக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 14, 2011 01:16 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குற்றாலம் : இலஞ்சி குண்டாற்றில் குப்பைகள் கொட்டுவதாலும், விஷ செடிகள் ஆக்கிரமித்துள்ளதாலும் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதால் குண்டாறு பராமரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கோட்டை, தென்காசி, குற்றாலம், கடையநல்லூர் போன்ற முக்கிய ஊர்களை இணைக்கும் மத்திய பகுதியாக இலஞ்சி விளங்கி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் குண்டாறு இந்த ஊரின் வழியாக ஓடி முக்கூடல் சிற்றாற்றில் கலக்கிறது. இந்த நீர் குடிநீர், பாசனம், மீன் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுகிறது. இதன்மூலம் பல்லாயிரம் ஏக்கர் பாசன நிலம் செழிப்படைகிறது.



தற்போது ஆற்றில் குப்பைகள், கால்நடை மற்றும் வீட்டு கழிவுகள் கலக்கப்படுவதால் குண்டாறு கூவமாக காட்சியளிக்கிறது. இந்த ஆற்றிற்கு கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வந்த பொதுமக்கள் தற்போது குளிக்கவே தயக்கம் காட்டுகின்றனர். மேலும் ஆற்றை சுற்றி ஆக்கிரமித்துள்ள அமலை செடிகள் ஆக்சிஜனை வேகமாக உறிஞ்சி வருவதால் நீர்வாழ் உயிரினங்கள் இறந்துவிடவும் வாய்ப்புள்ளது.வீடுகள் மற்றும் நிறுவனங்களின் கழிவுகள் ஆற்றிற்கு நேரடியாக திறந்துவிடப்படுவதாலும் கால்நடை கழிவு, வீட்டின் குப்பைகள் ஆற்றில் கொட்டப்படுவதாலும் நுண் கிருமிகள் பரவி ஆற்று நீரை பயன்படுத்துவோர் உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும், சரும நோய்கள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.



இந்நிலை நீடித்தால் வருங்காலத்தில் சுற்றுவட்டார பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எனவே போர்க்கால அடிப்படையில் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும், விஷ செடிகளையும் அப்புறப்படுத்தி பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










      Dinamalar
      Follow us