sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கைதான சென்னை வாலிபர் வாக்குமூலம்

/

கைதான சென்னை வாலிபர் வாக்குமூலம்

கைதான சென்னை வாலிபர் வாக்குமூலம்

கைதான சென்னை வாலிபர் வாக்குமூலம்


ADDED : ஜூலை 14, 2011 01:19 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை அருகே கள்ளத் தொடர்பை துண்டிக்குமாறு கூறிய பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை அருகே சுத்தமல்லியை சேர்ந்தவர் மூர்த்தி.

இவரது மனைவி தங்கம்(37). இவர் கொண்டாநகரத்தில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5ம்தேதி இரவு சுத்தமல்லி அருகே கொண்டாநகரம் ரோடு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்த சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் உடலை பரிசோதனைக்காக பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.



இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கொலையான பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தங்கம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.இந்த கொலை தொடர்பாக தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் தங்கி பணிபுரியும் சென்னை, வள்ளுவன் நகர் ஸ்ரீராமலு மகன் மிட்டா ரமேஷை(36) கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைதான மிட்டா ரமேஷ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது;நானும், தங்கமும் பிளாஸ்டிக் கம்பெனியில் பணிபுரிந்த போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளத் தொடர்பாக மாறியது. இதனையறிந்த அவரது கணவர், தங்கத்தை திட்டியதாக தெரிகிறது. இதனால் தங்கம், என்னிடம் கள்ளத் தொடர்பை துண்டிக்குமாறு கூறினார்.



இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தங்கத்தை சம்பவத்தன்று ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் நான், தங்கத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டேன். இவ்வாறு மிட்டா ரமேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள மிட்டா ரமேஷ், கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் நடந்த கொலையில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும், இவர் சென்னையில் இருந்து சுத்தமல்லியில் குடியேறி பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.










      Dinamalar
      Follow us