sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சுப்புலாபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்

/

சுப்புலாபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்

சுப்புலாபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்

சுப்புலாபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்


ADDED : ஜூலை 14, 2011 01:10 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேங்கடம் : சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா இரண்டு நாட்கள் நடந்தது.

முதல் நாள் மாலை எஜமானர் வர்ணம், விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜை, பிரவேசபலி, புண்ணியாக வாஜனம், ருத்ர ஹோமம், கும்ப ஆவாஹன யந்திர பூஜைகள், மகா கணபதி, லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி, நவக்கிர ஹோமங்கள், பூர்ணாகுதி, பிம்பசுத்தி, தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு மேல் யந்திர பிரதிஷ்டை நடந்தது.இரண்டாம் நாள் காலை கணபதி, ருத்ர, நவக்கிரக ஹோமங்கள், நாடி சந்தானம், பூர்ணாகுதி, கடம்புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், கணபதி, துர்க்கை, சரஸ்வதி, நவக்கிரகங்கள் மற்றும் உடையநாயகி அம்பிகைக்கு வருஷாபிஷேகம் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் தலைமையில் நடந்தது.பின் மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர். சிவகாசி சர்வசாதகம் கணேச அய்யர் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினார். விழா ஏற்பாடுகளை சுப்புலாபுரம் உடையநாயகி அம்பிகை கோயில் அக்தார் மற்றும் நிர்வாகியுமான சுப்பையா, கும்பாபிஷேக குழுவினர், இந்து செங்குந்தர் சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர்.










      Dinamalar
      Follow us