/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
புளியரை பெருமாள் கோயிலில்15ம் தேதி கும்பாபிஷேகம்
/
புளியரை பெருமாள் கோயிலில்15ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 13, 2011 01:30 AM
புளியரை:புளியரை நவநீத கிருஷ்ணன் கோயிலில் வரும் 15ம் தேதி மகா
கும்பாபிஷேகம் நடக்கிறது.புளியரை குருபகவான் கோயில் பின்புறம் இயற்கை எழில்
சூழ்ந்த நிலையில் மாயகிருஷ்ணன் நவநீதகிருஷ்ணணாக பக்தர்களுக்கு
அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த முடிவு
செய்யப்பட்டது. வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை
முன்னிட்டு இன்று (13ம் தேதி) அதிகாலை கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம்,
நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. மாலை வாஸ்து சாந்தி,
யாகசாலை பூஜைகள் நடக்கிறது.நாளை (14ம் தேதி) யாகசாலை பூஜை நடக்கிறது. 15ம்
தேதி காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தொடர்ந்து மகா கும்பாபிஷேகம்
நடக்கிறது.