/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கடன் வாங்கிய பெண்ணை மிரட்டிய பணம் கொடுத்த 4 பேர் கைது
/
கடன் வாங்கிய பெண்ணை மிரட்டிய பணம் கொடுத்த 4 பேர் கைது
கடன் வாங்கிய பெண்ணை மிரட்டிய பணம் கொடுத்த 4 பேர் கைது
கடன் வாங்கிய பெண்ணை மிரட்டிய பணம் கொடுத்த 4 பேர் கைது
ADDED : மார் 06, 2025 01:40 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில், அரசு அனுமதியின்றி நிதி நிறுவனம் நடத்தி, அதிக வட்டி வசூலித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவைச் சேர்ந்த சுரேஷ் மனைவி ரேவதி, 26, என்பவர், தனியார் நிதி நிறுவனம் நடத்தும் சுரேஷ், செல்வகுமார் மற்றும் கல்லிடைக்குறிச்சி அசோக் ராஜா, சங்கர் ராஜாவிடம், தலா, 5,000 ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்தியுள்ளார்.
இருப்பினும் தவணை தொகை செலுத்த தாமதமானதால், நிதி நிறுவன உரிமையாளர்கள் ரேவதியை மிரட்டினர். பணம் செலுத்தாவிட்டால் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதாக கூறினர்.
விக்கிரமசிங்கபுரம் போலீசில், ரேவதி புகார் அளித்தார். போலீசார் சுரேஷ், செல்வகுமார், அசோக் ராஜா, சங்கர் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.