/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையில் வீட்டில் குட்கா பதுக்கல் ராஜஸ்தானை சேர்ந்த 4 பேர் கைது
/
நெல்லையில் வீட்டில் குட்கா பதுக்கல் ராஜஸ்தானை சேர்ந்த 4 பேர் கைது
நெல்லையில் வீட்டில் குட்கா பதுக்கல் ராஜஸ்தானை சேர்ந்த 4 பேர் கைது
நெல்லையில் வீட்டில் குட்கா பதுக்கல் ராஜஸ்தானை சேர்ந்த 4 பேர் கைது
ADDED : செப் 05, 2024 08:44 PM
திருநெல்வேலி:தச்சநல்லுார் அருகேயுள்ள சிதம்பர நகர் பகுதியில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக தச்சநல்லுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிடிர சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் சுமார் 265 கிலோ குட்கா மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், டவுன் லாலுகாபுரம் தீபக்குமார் (24), ஜங்ஷன் சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோயில் தெரு சந்தீப்குமார் (27) என்பதும், இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தங்களது கூட்டாளிகளான ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிரகாஷ் (27), பரத்சிங் (45) உதவியுடன் குட்காவை விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரி யவந்தது.
இது குறித்து தச்சநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்குமார் உட்பட 4 பேரை கைது செய்தனர்.