/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை டவுன் சமோசா கடையில் சிலிண்டர் வெடித்து6 பேர் காயம் * மேலும் 3 கடைகள் தீக்கிரை
/
நெல்லை டவுன் சமோசா கடையில் சிலிண்டர் வெடித்து6 பேர் காயம் * மேலும் 3 கடைகள் தீக்கிரை
நெல்லை டவுன் சமோசா கடையில் சிலிண்டர் வெடித்து6 பேர் காயம் * மேலும் 3 கடைகள் தீக்கிரை
நெல்லை டவுன் சமோசா கடையில் சிலிண்டர் வெடித்து6 பேர் காயம் * மேலும் 3 கடைகள் தீக்கிரை
ADDED : மே 30, 2024 11:14 PM
திருநெல்வேலி:நெல்லை டவுன் சமோசா கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. மேலும்
3ரோட்டோரக்கடைகளுக்கு தீ பரவியது. இந்த விபத்தில்6 பேர் காயமடைந்தனர்.
நெல்லை டவுன், வடக்கு ரத வீதியில் பெரும் ஜவுளி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் முன்பு ரோட்டோரக் கடைகளும் அதிகம் உள்ளன. இங்கு பொருட்கள் வாங்குவதற்கு நாள் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரள்வர். இங்கு எப்போதும் அதிக கூட்டம் இருக்கும்.
நேற்று மதியம் வடக்கு ரத வீதியில் ஷேக்அலி என்பவரின் சமோசா, இஞ்சி டீ கடையில் காஸ் சிலிண்டர் குழாயில் தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அப்போது தீ குப்பென சில அடி தூரம்
பரவியதால் கடை முன் நின்ற மக்கள், ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.
சமோசா கடையில் அனைத்துப் பொருட்களும் தீயில் கருகின. அந்தக் கடை முன்பு ஜவுளி, செருப்பு, துணிகளை விற்ற ௩ தள்ளுவண்டி கடைகளுக்கும் தீ பரவியது. அந்தக் கடைகளிலும் பொருட்கள் சேதமடைந்தன. பேட்டை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
6 பேர் காயம்
சமோசா கடை ஊழியர் மாரியப்பன், துணிக்கடை ஊழியர் சின்னத்துரை காயமடைந்து பாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் ௪ பேர் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். சம்பவ இடத்தில் நெல்லை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். மக்கள் நடமாட்டம் சற்றுக் குறைவாக உள்ள மதிய நேரத்தில் விபத்து நடந்ததால் அதிக நபர்கள் பாதிக்கப்படுவது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
தீ விபத்து நடந்ததும் ஏராளமானோர் அங்கு வேடிக்கை பார்க்க திரண்டனர். தீ விபத்து நடக்கும் போது பொருட்கள் வெடித்துச் சிதற அதிக வாய்ப்புள்ளது. பல அடிகள் தூரம் தள்ளி நிற்பவர்கள் மீதும் பொருட்கள் விழுந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து தீ விபத்து நடக்கும் இடத்திற்கு அருகே மக்கள் செல்லக்கூடாது என தீயணைப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆக்ரமிப்புகளால் ஆபத்து
நெல்லை டவுன் ரத வீதிகளில் ஆக்ரமிப்புக் கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வணிக நிறுவனங்கள், கடைகள் முன்பு அமைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டிக் கடைகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ரோட்டில் வாகனத்தில் செல்ல முடியாத சூழல் உள்ளது.
நேற்று தீ விபத்து நடந்த போது சமோசாக் கடைக்கு தீயணைப்புத்துறையினர் சென்று தீயை அணைப்பதற்கு திணறும் நிலை ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரோட்டில் ஆக்ரமிப்புக் கடைகளால் ஏற்படும் இடையூறுகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.