/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கோர்ட் ஊழியர் மீது அரசு பஸ் மோதி பலி; மாடுகள் சண்டைக்காக ஒதுங்கியவர்

ADDED : ஜூன் 23, 2024 09:17 AM
திருநெல்வேலி, : திருநெல்வேலி பேட்டை தங்கம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதராஜ் 58. திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் இளநிலை கட்டளை பணியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 8:00 மணியளவில் கோர்ட் சம்மன் கொடுக்கும் பணிக்காக மொபட்டில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்றார்.
தற்போது தெற்கு பைபாஸ் ரோட்டை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இவர் சென்ற பகுதியில் இரு மாடுகள் சண்டையிட்டன. இதற்காக ஒதுங்கியவர் மீது நாகர்கோவிலில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் வேலாயுதராஜ் சம்பவயிடத்தில் பலியானார்.