/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவியை பாருக்கு அழைத்த பேராசிரியர் கைது மற்றொருவர் தலைமறைவு; நெல்லையில் பரபரப்பு

ADDED : செப் 14, 2024 10:56 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி துாய சவேரியார் தன்னாட்சி கல்லுாரியில், 4,000க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர்; 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். சுயநிதி முதுகலை சமூகவியல் துறைத்தலைவர் பால்ராஜ், 41, மற்றும் பேராசிரியர் செபாஸ்டின், 40, ஆகியோர் ஒரு பாரில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, பால்ராஜ், மொபைல் போனில் ஒரு மாணவியை அழைத்து, 'பாருக்கு மது அருந்த வருகிறீர்களா?' எனக் கேட்டுள்ளார். அப்போது செபாஸ்டினும் மாணவியிடம் பேசியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
பெற்றோர், திருநெல்வேலி மாநகர போலீசில் புகார் செய்தனர். சிட்டி போலீசார் சமரசம் பேசினர். மாணவிக்கு வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும் என புத்திமதி கூறினர். பின்னர் மாணவியை அழைத்து புகாரை வாபஸ் பெறும்படி செய்தனர்.
ஆனால், இதுபற்றிய தகவல் வெளியாகி, ஹிந்து முன்னணி போன்ற அமைப்புகள், 'இப்பிரச்னையில் போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்' என, அறிக்கை வெளியிட்டனர்.
தென் மாவட்ட பிரச்னைகளை கவனிக்கும் ஏ.டி.ஜி.பி., ஒருவரின் உத்தரவின்படி, பேராசிரியர் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். செபாஸ்டின் நேற்று கைது செய்யப்பட்டார். பால்ராஜ் தலைமறைவானார்.