/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருப்புடைமருதுார் கோவிலில் 40 ஆண்டுக்கு பின் நாயன்மார் வீதி உலா
/
திருப்புடைமருதுார் கோவிலில் 40 ஆண்டுக்கு பின் நாயன்மார் வீதி உலா
திருப்புடைமருதுார் கோவிலில் 40 ஆண்டுக்கு பின் நாயன்மார் வீதி உலா
திருப்புடைமருதுார் கோவிலில் 40 ஆண்டுக்கு பின் நாயன்மார் வீதி உலா
ADDED : ஜூலை 12, 2024 11:10 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி திருப்புடைமருதுார் நாறும்பூநாத சுவாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின், 63 நாயன்மார் வீதி உலா நேற்று நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதுாரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நாறும்பூநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கோபுரத்தில் உள்ள ஓவியங்கள் மிகப் பழமையானவை. இக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் நேற்று, 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. கட்டளைதாரர் சண்முகசுந்தரம், சுப்ரமணியன், ஸ்ரீ ஜெயேந்திரர் பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் பங்கேற்றார். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.