/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
துறை அமைச்சரே பங்கேற்காத வேளாண் பட்ஜெட் கூட்டம்
/
துறை அமைச்சரே பங்கேற்காத வேளாண் பட்ஜெட் கூட்டம்
ADDED : மார் 07, 2025 01:53 AM
திருநெல்வேலி:தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ல் துவங்குகிறது. விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்படுகிறது. அதில் கொண்டு வர வேண்டிய திட்டங்கள் குறித்து விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலியில் நடந்தது.
கரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகளை, வேளாண்துறை அதிகாரிகளே வாகனங்களில் அழைத்து வந்தனர். மொத்தம், 800 விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்பர் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமே நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பிற அமைச்சர்களும் வரவில்லை. திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேரு, சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார் மற்றும் துறை செயலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
வேளாண் துறை அதிகாரிகள் அழைத்து வந்த சிலர் மட்டுமே கருத்து கூற அனுமதிக்கப்பட்டனர். பிற விவசாயிகளை மனுக்கள் தரவோ, பேசவோ அனுமதிக்கவில்லை.