/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
/
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
ADDED : ஏப் 25, 2024 04:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மணிமுத்தாறு அருவி 4 மாதமாக மூடப்பட்டு இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தின் போது அருவியில் தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தது. பராமரிப்பு பணி காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
தற்போது பணிகள் முடிந்து விட்டது. நாளை (ஏப்ரல் 26) முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

