/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
17 வயதில் வேலைக்கு வந்த அசாம் சிறுவன் தற்கொலை
/
17 வயதில் வேலைக்கு வந்த அசாம் சிறுவன் தற்கொலை
ADDED : செப் 07, 2024 07:08 AM
திருநெல்வேலி,: அசாம் மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி அருகே வேலைக்கு வந்த 17 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கல் சூளைகள், சிமென்ட் பேவர் பிளாக் தொழிற்சாலை, ஓட்டல்கள், கட்டுமான பணிகள், குவாரிகள் என பலவற்றிலும் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். உவரி அருகே சிமென்டில் பேவர் பிளாக் செய்யும் தொழிற்சாலைக்கு அசாமை சேர்ந்த குல்தார் உசேன் 17, என்ற சிறுவன் நேற்று முன்தினம் தான் பணிக்கு வந்தார். ஒரு நாள் மட்டுமே வேலை செய்த அவர் மாலையில் தாயுடன் அலைபேசியில் பேசினார். இரவில் தங்கி இருந்த இடத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உவரி போலீசார் விசாரிக்கின்றனர். உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு நடந்தது.