/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சமூக ஆர்வலர் மீது தாக்குதல் மேலும் மூன்று பேர் கைது
/
சமூக ஆர்வலர் மீது தாக்குதல் மேலும் மூன்று பேர் கைது
சமூக ஆர்வலர் மீது தாக்குதல் மேலும் மூன்று பேர் கைது
சமூக ஆர்வலர் மீது தாக்குதல் மேலும் மூன்று பேர் கைது
ADDED : மே 16, 2024 09:18 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பெர்டின் ராயன், 35. கடந்த 4ம் தேதி காலையில், மர்ம நபரால் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். அவர் தற்போது, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
திருநெல்வேலி மற்றும் மேலப்பாளையம் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடந்த முறைகேடான பத்திரப்பதிவுகள் குறித்து புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் வெட்டப்பட்டார்.
அவரை தாக்கிய, திண்டுக்கல்லை சேர்ந்த தாஜுதீன், 25, நேற்று முன்தினம் திருநெல்வேலி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவர் உட்பட மூன்று பேர் திண்டுக்கல்லில் இருந்து கூலிப்படையாக திருநெல்வேலிக்கு ஒரு மாதத்திற்கு முன் வந்தனர்.
உள்ளூர் நபர்கள் துணையுடன் ஒரு மாதத்திற்கு மேலாக பெர்டின் ராயனை கண்காணித்தனர். போலீஸ் கமிஷனர் பா.மூர்த்தி உத்தரவில் உதவிகமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர், மேலப்பாளையத்தைச் சேர்ந்த முல்லான் சையத் அலி, 48, முஸாம்பில் முர்ஜித், 19, அப்துல் அஜீஸ், 30, ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.

