/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போராடியவர்கள் மீது தடியடி: இரண்டு எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
/
போராடியவர்கள் மீது தடியடி: இரண்டு எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
போராடியவர்கள் மீது தடியடி: இரண்டு எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
போராடியவர்கள் மீது தடியடி: இரண்டு எஸ்.ஐ.,க்கள் மாற்றம்
ADDED : மே 11, 2024 02:36 AM
திருநெல்வேலி:தேவர்குளம் அருகே போலீசை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தில் இரண்டு எஸ்.ஐ.,க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி -- சங்கரன்கோவில் சாலையில் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மீது தேவர்குளம் போலீசார் பொய் வழக்குகள் பதிவதாக கூறி கடந்த 8ம் தேதி வன்னிகோனேந்தலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடையடைப்பு: தடியடி, கைதை கண்டித்து நேற்று முன்தினம் தேவர்குளம், வன்னிகோனேந்தல், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
நேற்று சங்கரன்கோவில் தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜா, ம.தி.மு.க., மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க மாவட்ட பொருளாளர் சரவணன் உள்பட பல்வேறு அமைப்பினர் திருநெல்வேலியில் கலெக்டர் கார்த்திகேயன், டி.ஐ.ஜி.,பா.மூர்த்தி, எஸ்.பி.சிலம்பரசன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். கைதானவர்களை விடுவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். வருவாய்த்துறை மூலம் மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக நிலை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனிடையே தேவர்குளம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய அருள்ராஜ், பவுல் ஆகிய இரண்டு எஸ்.ஐ.,க்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர்.