/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
காங்., தலைவர் மரணம் குடும்பத்திடம் விசாரணை
/
காங்., தலைவர் மரணம் குடும்பத்திடம் விசாரணை
ADDED : மே 26, 2024 12:25 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த 4ம் தேதி அவரது வீட்டு தோட்டத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படைகள் விசாரித்தும், கொலையா, தற்கொலையா என துப்பு துலங்காததால் விசாரணை சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.பி., முத்தரசி இரண்டு தினங்களாக திருநெல்வேலியில் தங்கி விசாரித்து வருகிறார். நேற்று முன்தினம் கரைச்சுத்துபுதுாரில் ஜெயக்குமார் இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், மார்ட்டின், மகள் கேத்ரின் ஆகியோர் திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு வந்தனர்.
ஜெயக்குமார் இறப்பு குறித்து தங்கள் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். அவர்களிடம் தனித்தனியாகவும் விசாரணை நடந்தது. விசாரணை மாலை வரை நீடித்தது.