ADDED : செப் 08, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி சமாதானபுரம் காந்திநகரைச் சேர்ந்தவர் பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற இன்ஜினியர் டைசன் டொட்ரிகோ. இவரது மகன் ஹார்ட்லி மேக்ஸ்டன் ரோட்டரிகோ 29. சிவில் இன்ஜினியர். கட்டுமான தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
நேற்று சீவலப்பேரி அருகே தாமிரபரணி குறுக்கே உள்ள மருதூர் அணைக்கட்டில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். ஆழமான பகுதியில் மூழ்கி இறந்தார். அவரது உடலை நண்பர்கள் மீட்டனர்.
முறப்பநாடு போலீசார் விசாரித்தனர்.