/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்பு தொழில் முனைவோர் கவர்னரிடம் கோரிக்கை
/
தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்பு தொழில் முனைவோர் கவர்னரிடம் கோரிக்கை
தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்பு தொழில் முனைவோர் கவர்னரிடம் கோரிக்கை
தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்பு தொழில் முனைவோர் கவர்னரிடம் கோரிக்கை
ADDED : மார் 01, 2025 02:52 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம், தொழில் முனைவோர், கல்வியாளர்களுடன் தமிழக கவர்னர் ரவி கலந்துரையாடல் நடத்தினார். இதில், முக்கிய பிரமுகர்கள், தொழில் முனைவோர் பேசியதாவது:
நெல்லை, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதில் உள்ள நடைமுறை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி, வணிகர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, ௫௦,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும், மது, போதை பொருட்களால் சமுதாய சீரழிவு தொடர்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பெண்கள் மீதான அடக்குமுறைகள் உள்ளிட்ட சமூக பிரச்னைகள் காணப்படுகின்றன.
இதை முற்றிலும் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தென்மாவட்டங்களில் போதுமான தொழில், வேலைவாய்ப்பு வசதி இல்லாததால் பலர் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர்.
இதைத் தடுக்கும் வகையில் தென்மாவட்டங்களில் போதுமான தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
துாத்துக்குடியில் விமானம் மற்றும் கடல் வழியாக உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் தென் மாவட்ட மக்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கவர்னர் ரவி, தொழில் முனைவோர் மற்றும் கல்வியாளர்களுக்கு உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில், நெல்லை, நாகர்கோவில் 'தினமலர்' நிர்வாக இயக்குநர் தினேஷ், தொழிலதிபர் சுபாஷ், அருணா கார்டியாக் கேர் டாக்டர் அருணாசலம், சுவர்ணலதா அருணாசலம், நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் மற்றும் தென்காசி, துாத்துக்குடி, குமரி மாவட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.