ADDED : ஏப் 30, 2024 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன், 55. இவரது மகள் முத்துப்பேச்சி, 30. இவர், தன் கணவர் கொம்பையாவுடன் நடுவக்குறிச்சியில் வசித்து வந்தார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். முத்துப்பேச்சி, மற்றொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு மாரியப்பன் கண்டித்தார்.
நேற்று முன் தினம் மாலை 4:30 மணிக்கு நடுவக்குறிச்சியில் இருந்து மேலப்பாட்டம் வீட்டுக்கு மகளை அவர் அழைத்து வந்தார். அப்போது முத்துப்பேச்சி தகராறு செய்தார். ஆத்திரமடைந்த மாரியப்பன் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். போலீசார் மாரியப்பனை கைது செய்தனர்.