/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோவில் தேர்கள் ஆய்வு
/
நெல்லையப்பர் கோவில் தேர்கள் ஆய்வு
ADDED : செப் 08, 2024 11:29 PM

திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவிலில் ஜூலை 2ல் திருவிழா தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் முடிந்து, 60 நாட்களுக்கு மேலாகியும் சுவாமி, அம்பாள் தேர்களுக்கு ஏற்கனவே உள்ள கண்ணாடி கூண்டுகள் பொருத்தாமல் வெயிலில் நிற்கின்றன.
தேர் நிற்கும் தரைதளத்தில் சிமென்ட் தளம் புதிதாக அமைக்க உள்ளதாகவும், அதனால் தாமதமாவதாகவும் கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நெல்லையப்பர் கோவில் தேர்களை நேற்று ஆய்வு செய்து, உடனே கண்ணாடி கூண்டு அமைக்க உத்தரவிட்டார்.
தற்போது வரை அம்பாள் தேர், சண்டிகேஸ் வரர், முருகன், விநாயகர் ஆகிய தேர்களுக்கு மட்டுமே கூண்டு உள்ளது.
சுவாமி தேர் எனப்படும் பெரிய தேருக்கு கண்ணாடி கூண்டு இல்லை. தகர ஷெட் மட்டுமே உள்ளது. அதற்காக, 30 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. வரும் தினங்களில் அந்த கூண்டு பொருத்தப்படும் என, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தெரிவித்தார்.