ADDED : மே 26, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் 2013 - 2014 ஆண்டில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் விஜயகுமார்.
அந்த காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கில் விஜயகுமார் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் அவர் மே 31ல் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் உத்தரவிட்டார். அவர் தற்போது துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.