/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வழக்கறிஞர் வெட்டிக்கொலை திருநெல்வேலியில் வக்கீல்கள் போராட்டம்
/
வழக்கறிஞர் வெட்டிக்கொலை திருநெல்வேலியில் வக்கீல்கள் போராட்டம்
வழக்கறிஞர் வெட்டிக்கொலை திருநெல்வேலியில் வக்கீல்கள் போராட்டம்
வழக்கறிஞர் வெட்டிக்கொலை திருநெல்வேலியில் வக்கீல்கள் போராட்டம்
ADDED : ஆக 22, 2024 02:47 AM

திருநெல்வேலி,:திருநெல்வேலியில் நிலத் தகராறில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி வி. எம். சத்திரம் அருகே ஆரோக்கியநாதபுரத்தில் ஒரு தரப்பினர் நிலத்தை பிளாட்களாக மாற்ற இயந்திரங்கள் மூலம் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நிலம் தமக்குரியது என கூறும் இன்னொரு தரப்பினர் நிலத்தை சீர் செய்து கொண்டிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் அங்கிருந்த வழக்கறிஞர் சரவணராஜ் 32, என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் இறந்தார். அதே சம்பவத்தில் சாம் எனும் இன்னொரு வழக்கறிஞருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இறந்த வழக்கறிஞர் சரவணராஜ் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர். சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யவும் இறந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்க கோரியும் வழக்கறிஞர்கள் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கமிஷனர் கீதா, தாசில்தார் சரவணன் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்துப் போராட்டம் முடிவுக்கு வந்தது. சரவணராஜ் கொலை சம்பவத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரின் டிரைவர் செல்வம் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.