/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
3 வயது சிறுவன் மூச்சுக்குழாயில் சிக்கிய எல்.இ.டி., பல்பு அகற்றம்
/
3 வயது சிறுவன் மூச்சுக்குழாயில் சிக்கிய எல்.இ.டி., பல்பு அகற்றம்
3 வயது சிறுவன் மூச்சுக்குழாயில் சிக்கிய எல்.இ.டி., பல்பு அகற்றம்
3 வயது சிறுவன் மூச்சுக்குழாயில் சிக்கிய எல்.இ.டி., பல்பு அகற்றம்
ADDED : பிப் 23, 2025 07:01 AM
திருநெல்வேலி : சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய எல்.இ.டி., பல்பை திருநெல்வேலி அரசு மருத்துவமனை டாக்டர்கள் 20 நிமிடங்களில் அறுவை சிகிச்சையின்றி நவீன சிகிச்சையில் அகற்றினர்.
துாத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்தவர் அருண் கணேஷ். இவரது, 3 வயது மகன் விகான். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, குழந்தை தெரியாமல் எல்.இ.டி., பல்பை விழுங்கியது. வலது மூச்சுகுழாயில் பல்பு சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர் ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் , மூச்சுக்குழாயில் ரிஜிட் பிராங்கோஸ்கோபி எனும் நவீன கருவியால் அறுவை சிகிச்சையின்றி, 20 நிமிடங்களில் பல்பை அகற்றினர். டாக்டர்கள் குழுவினரை மருத்துவ கல்லுாரி டீன் டாக்டர் ரேவதிபாலன் பாராட்டினார்.