ADDED : மே 16, 2024 02:34 AM
திருநெல்வேலி:காதல் திருமணம் செய்த ஜோடி தனித்தனியே தற்கொலை செய்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்தவர் பிரபாகர் 24. கூலித்தொழிலாளி. இவர், தூத்துக்குடியை சேர்ந்த உறவினரான புனிதா 18, என்பவரை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் திசையன்விளை அருகே எருமைக்குளத்தில் வசித்து வந்தனர். பிரபாகருக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்கு செல்லவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே புனிதா நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வந்தனர். மனைவி இறந்த தகவல் அறிந்த பிரபாகர் வீட்டுக்கு செல்லவில்லை. காட்டுப் பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.