/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை காங்., தலைவர் கொலை வழக்கு ஆவணங்களை பகுப்பாய்வு செய்யும் பணி * சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிரம்

ADDED : மே 28, 2024 10:07 PM
திருநெல்வேலி:நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு விசாரணையில் கிடைத்த முக்கிய ஆவணங்களை பகுப்பாய்வு செய்யும் பணியில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரைச் சேர்த்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவராக இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி வீட்டுக்குப்பின் உள்ள தோட்டத்தில் உடல் எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து நெல்லை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
ஜெயக்குமாரின் குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரணை நடந்தது. ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தில் அளவீடு செய்து தடயங்களை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் கரைச்சுத்துபுதூர் சென்று மீண்டும் விசாரணையில் ஈடுபட்டனர்.
கடந்த ௪ நாட்களாக மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள், மாவட்ட போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு பரிசோதனை அறிக்கைகள், மாவட்ட போலீசார் வழங்கிய ஆவணங்களை பகுப்பாய்வு செய்யும் பணி நடக்கிறது. மாவட்ட போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விடுபட்டவற்றைக் கண்டறிந்து தனிக்கவனம் செலுத்தி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மாவட்ட எஸ்.பி.,க்கும், உறவினருக்கும் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் 32 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய காங்., பிரமுகர்கள் உட்பட பலரிடம் விரைவில் நெல்லை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணை நடக்கவுள்ளது.