/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாநகராட்சி வாசல் படியை தொட்டு வணங்கிய நெல்லை புதிய கமிஷனர்
/
மாநகராட்சி வாசல் படியை தொட்டு வணங்கிய நெல்லை புதிய கமிஷனர்
மாநகராட்சி வாசல் படியை தொட்டு வணங்கிய நெல்லை புதிய கமிஷனர்
மாநகராட்சி வாசல் படியை தொட்டு வணங்கிய நெல்லை புதிய கமிஷனர்
ADDED : ஜூலை 25, 2024 10:07 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி வாசல் படிகள், இருக்கையை தொட்டு வணங்கி கமிஷனராக சுகபுத்ரா நேற்று பொறுப்பேற்றார்.
இங்கு கமிஷனராக இருந்த தாக்கரே ஈரோடு மாவட்ட வணிகவரித்துறை அதிகாரியாக மாற்றப்பட்டார். திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டராக பணிபுரிந்த சுகபுத்ரா நேற்று கமிஷனராக பொறுப்பேற்றார்.
அலுவலக வாசலில் அவருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நுழைவாயிலில் உள்ள படிக்கட்டுகளை தொட்டு வணங்கி அலுவலகத்தில் வந்தார். தன் அறையில் இருக்கையையும் தொட்டு வணங்கி பொறுப்பு ஏற்றார்.
அவர் கூறுகையில், ''திருநெல்வேலி மாநகராட்சியில் தாமிரபரணியில் கழிவுகள் கலக்காத படி சீரமைக்கப்படும். மாநகராட்சியில் 120க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அனுமதி இன்றி கட்டப்பட்டிருப்பது குறித்தும், 1,000 கோடி ரூபாயில் நடந்துள்ள 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வராதது குறித்தும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.