/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வள்ளியூர் பாதிரியார் சாவில் மர்மம் தாக்கியோர் மீது நடவடிக்கை இல்லை
/
வள்ளியூர் பாதிரியார் சாவில் மர்மம் தாக்கியோர் மீது நடவடிக்கை இல்லை
வள்ளியூர் பாதிரியார் சாவில் மர்மம் தாக்கியோர் மீது நடவடிக்கை இல்லை
வள்ளியூர் பாதிரியார் சாவில் மர்மம் தாக்கியோர் மீது நடவடிக்கை இல்லை
ADDED : மே 15, 2024 08:54 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கத்தோலிக்க சர்ச் உதவி பங்குத்தந்தை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை வழிமறித்து தாக்கிய கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் எழுதிய 7 பக்க கடிதமும் வெளியிடப்படவில்லை.
வள்ளியூரில் பாத்திமா அன்னை கத்தோலிக்க சர்ச் உள்ளது. இதன் பங்கு தந்தையாக ஜான்சன் உள்ளார். உதவி பங்கு தந்தையாக ஆரோக்கியதாஸ், 35, பணியாற்றினார். இவரது சொந்த ஊர் அரக்கோணம். கத்தோலிக்க பாதிரியார் பயிற்சிக்குப் பிறகு, ஒரு ஆண்டு உதவி பங்கு தந்தையாக சர்ச்சில் பணியாற்ற வேண்டும்.
அதன்படி, வள்ளியூரில் கடந்த ஓராண்டாக பணியாற்றி, நேற்று முன்தினம் பயிற்சியை நிறைவு செய்தார். புதிதாக வேறு சர்ச்க்கு மாற்றப்பட இருந்த நிலையில் அவர் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வள்ளியூர் போலீசார் விசாரித்தனர்.
சந்தேகங்கள்
ஆரோக்கியதாஸ் வள்ளியூரில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவரை அதே பகுதியில் காவல்கிணறு சர்ச்சுக்கு முதலில் இடம் மாற்றம் செய்தனர். சில தினங்களுக்கு முன் தெற்கு வள்ளியூர் சர்ச்சுக்கு ஆராதனைக்கு சென்று விட்டு டூ-வீலரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை நான்கு பேர் கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கினர். அவரது அலைபேசியை பறித்துக் கொண்டனர். இதில் அவரது டூ-வீலரும் சேதமடைந்தது. அவர் தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் தர முன் வரவில்லை.
அலைபேசி பறிக்கப்பட்டதால் புதிதாக அலைபேசி வாங்கிக் கொண்டார். இந்நிலையில், காவல்கிணறுக்கு பதிலாக பொன்னேரிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
மன உளைச்சலில் இருந்த அவர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஏழு பக்க கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்த 7 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். ஆனால் கடிதத்தை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
திசையன்விளை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறந்ததில் அவர் எழுதிய கடிதத்தை அவரது குடும்பத்தினரே வெளியிட்டதால் தான் அவருக்கு இருந்த கடன் பிரச்னைகள், மிரட்டல்கள் வெளியே தெரிய வந்தது.
ஆரோக்கியதாஸ் ஜாதி ரீதியாக பழிவாங்கப்பட்டாரா அல்லது வேறு அழுத்தங்கள் இருந்தனவா என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தினால் தான் தெரிய வரும்.