/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜாதி பாடல் ஒலித்தால் டிரைவர், கண்டக்டர் கைது: போலீஸ் எச்சரிக்கை
/
ஜாதி பாடல் ஒலித்தால் டிரைவர், கண்டக்டர் கைது: போலீஸ் எச்சரிக்கை
ஜாதி பாடல் ஒலித்தால் டிரைவர், கண்டக்டர் கைது: போலீஸ் எச்சரிக்கை
ஜாதி பாடல் ஒலித்தால் டிரைவர், கண்டக்டர் கைது: போலீஸ் எச்சரிக்கை
UPDATED : ஆக 17, 2024 02:21 AM
ADDED : ஆக 17, 2024 01:29 AM

திருநெல்வேலி :திருநெல்வேலி பஸ்களில் ஜாதிய பாடல்கள் ஒலித்தால் டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்படுவர்கள் என மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மாணவர்களிடையே ஜாதி மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்வது என்ற சம்பவங்கள் நடக்கின்றன. பஸ்கள், பஸ் ஸ்டாண்ட்களில் மாணவர்கள் கூடும் போதும் மோதல்கள் ஏற்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் சில தினங்களில் 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் சேரன்மகாதேவி அருகே மனோ பல்கலை கல்லுாரி மாணவர்கள் மொபைல் ஆன்லைன் விளையாட்டில் மோதிகொண்டதில் சிலர் கைதாகினர்.
எனவே மாணவர் மோதலை தடுக்கும் வகையில் திருநெல்வேலி போலீசார் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் தனியார், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களிடையே மோதல் குறித்த தகவல்களை உடனடியாக போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல், பயன்படுத்துவது குறித்த சந்தேகம் இருந்தாலும் போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். மாநகர பகுதிகளில் பஸ்களில் ஜாதி ரீதியிலான பாடல்ஒலிபரப்ப கூடாது, அது போன்ற பாடல்களை அழித்துவிட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மீறி ஜாதி ரீதியான பாடல்கள் ஒலிக்க செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

