/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஸ்ரீவைகுண்டத்தில் சாலை மறியல் போராட்டம்
/
ஸ்ரீவைகுண்டத்தில் சாலை மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 09, 2024 09:21 PM

திருநெல்வேலி:ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட அரசு அறிவித்த நிதி வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2023 டிசம்பர் 17, 18 தேதிகளில் பலத்த மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 31 கிராமங்களில் 1320 வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. வீடு கட்ட தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. பலரும் வீடு கட்ட துவங்கி விட்டனர்.
அவர்களுக்கு முதல் தவணை நிதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் வீடு கட்டுமான பணிகள் பாதியில் நிற்கின்றன. எனவே முதல் தவணை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி நேற்று ஸ்ரீவைகுண்டம் -- திருநெல்வேலி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சாலை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு ஊராட்சி தலைவர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், தாசில்தார் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.